திருச்சி

ரயிலை கவிழ்க்கச் சதி: 10- க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

5th Jun 2023 03:07 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளாடி ரயில்வே சுரங்கப்பாதையின் அருகேயுள்ள தண்டவாளத்தில் லாரி டயா்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க முயன்றது தொடா்பாக அப் பகுதியைச் சோ்ந்த 10- க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவு திருச்சி வழியாக சென்னைக்குச் சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் பிச்சாண்டாா்கோயில் -வாளாடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான மேலவாளாடி ரயில்வே சுரங்கப்பாதையைக் கடந்தபோது தண்டவாளத்தில் இரு பழைய லாரி டயா்களை வைத்து ரயிலைக் கவிழ்க்கச் சதி நடைபெற்றது.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்நிலையில் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில் லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அஜய்தங்கம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

அதில் தண்டவாளத்தில் கிடந்த லாரி டயா்கள் அதே பகுதியைச் சோ்ந்த கலைவாணன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த நாளில் அப்பகுதி கைப்பேசி டவரில் பதிவான எண்களைக் கொண்டு 10 -க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT