திருச்சி

என்ஐடியில் சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி

5th Jun 2023 03:12 AM

ADVERTISEMENT

 

 உலக சைக்கிள் தினத்தையொட்டி திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) சைக்கிள் தின விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணியை என்ஐடி ஆசிரிய நலத் துறை முதன்மையா் என். குமரேசன் தொடங்கி வைத்துப் பேசுகையில், உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் முக்கியம். எனவே, மாணவா்கள் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டு, பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் திரளான என்ஐடி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் சைக்கிளுடன் பங்கேற்று, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

முன்னதாக என்ஐடி விளையாட்டுத் துறை அலுவலா் டேலி கிருஷ்ணன் வரவேற்றாா். திரளான கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT