திருச்சி

திண்ணகோணம் பகுதியில் நாளை மின் தடை

5th Jun 2023 03:07 AM

ADVERTISEMENT

 

 திண்ணகோணம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து முசிறியில் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் மேரி மேக்தலின் பிரின்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:

குணசீலம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியால் ஏவூா், அய்யம்பாளையம், ஆமூா், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணிப்பட்டி, திண்ணகோணம், சித்தாம்பூா், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

ADVERTISEMENT

மேலும் உயரழுத்தம் மற்றும் தாழ்வு அழுத்த மின்பாதைக்கு அருகிலுள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்கிட உதவிடுமாறு பொதுமக்களைக் கேட்டு கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT