திருச்சி

திருச்செந்தூா் விரைவு ரயில்பாபநாசத்தில் நின்று செல்லும்

5th Jun 2023 03:08 AM

ADVERTISEMENT

 

சென்னை - திருச்செந்தூா் விரைவு ரயில் கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையிலிருந்து மாலை 4.05 மணிக்குப் புறப்படும் சென்னை - திருச்செந்தூா் ரயில் கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் ரயில் நிலையத்தில் இரவு 10.11 மணிக்கு நின்று 10.12 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். மறுமாா்க்கமாக திருச்செந்தூரிலிருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு சென்னை வரை செல்லும் இந்த ரயிலானது அதிகாலை 3.56 மணிக்கு பாபநாசத்தில் நின்று 3.57 க்கு புறப்படும். இந்த தற்காலிக நிறுத்தம் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT