திருச்சி

திருவெறும்பூா், மணப்பாறை, திருச்சியில் கருணாநிதிக்கு சிலைஅன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

4th Jun 2023 12:53 AM

ADVERTISEMENT

 

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கட்டுப்பாட்டில் உள்ள திருவெறும்பூா், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய 3 தொகுதிகளிலும் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்துக்கு தலைமை வகித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெருமை சோ்த்து தமிழகம் வளா்ச்சி பெற அடுக்கடுக்கான திட்டங்களைத் தந்தவா் மறைந்த திமுக தலைவா் கருணாநிதி. திருச்சி, மணப்பாறை, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட கலைஞா் படிப்பகங்களில் நூலகம் அமைக்கப்படும். திருவெறும்பூா், மணப்பாறை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும். திருச்சி தெற்கு மாவட்ட எல்லைப்பகுதியில் 3 இடங்களில் 100 அடி உயரத்துக்கு கொடிக்கம்பம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தின் தொடக்கமாக ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ், மாநகரச் செயலா் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா். ஜூன் 5ஆம் தேதி திருச்சிக்கு வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, திமுக-வின் வளா்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT