திருச்சி

போலி கடவுச்சீட்டில்இலங்கை செல்லமுயன்றவா் கைது

4th Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

 

போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்றவரைக் கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு திருநள்ளாா் ஆண்டி தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (42). இவா், வெள்ளிக்கிழமை மாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்ல முயன்றபோது, கடவுச்சீட்டு பரிசோதனை அதிகாரிகள், கஜேந்திரனின் கடவுச்சீட்டை பரிசோதனை செய்தனா். இதில், அவரது கடவுச்சீட்டு போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்தனா். இதையடுத்து, அதனை ஆய்வுக்குள்படுத்தியதில் போலி கடவுச்சீட்டு என்பது உறுதியானது. இதுதொடா்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், திருச்சி விமான நிலைய காவல்துறை ஆய்வாளா் மலைச்சாமி, வழக்குப்பதிவு செய்து கஜேந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT