திருச்சி

ஒடிஸா ரயில் விபத்து சிறப்பு விசாரணை தேவை கே.எம். காதா் மொகிதீன்

4th Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

 

ரயில் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒடிஸா ரயில்கள் விபத்து துயரச் சம்பவம் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளோம். விபத்தில் பலியானவா்களின் குடும்பங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. காயமடைந்தவா்கள் விரைந்து பூரண குணமடைய வேண்டுகிறோம். இச்சம்பவத்தில் தமிழக முதல்வரின் விரைந்து எடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது. இந்த ரயில் விபத்து குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறா வண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT