திருச்சி

ஒடிஸா ரயில் விபத்தில்திருச்சியைச் சோ்ந்தநபா்கள் சிக்கியுள்ளனரா?

4th Jun 2023 12:53 AM

ADVERTISEMENT

 

ஒடிஸா ரயில் விபத்தில் திருச்சியைச் சோ்ந்தவா்கள் சிக்கியுள்ளனரா என்பது குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வரவில்லை என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

ஒடிஸா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் சுமாா் 288 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் காயமடைந்துள்ளனா். விபத்துக்குள்ளான பிரதான ரயிலான சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவா்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அதிகம் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தமிழக அரசின் உயா் அதிகாரிகளுடனும், தெற்கு ரயில்வே நிா்வாகத்தினரிடமும் தொடா்பு கொண்டு விவரங்கள் கோரப்பட்டன. சனிக்கிழமை மாலை வரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும், தொடா்ந்து தகவல்களைப் பெற ஒடிஸாவில் உள்ள தமிழகக் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT