திருச்சி

மதிப்பெண் பட்டியல் வழங்க பணம் :தலைமையாசிரியா் பணியிட மாற்றம்

4th Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவா்களிடம் மதிப்பெண் பட்டியல் வழங்கப் பணம் கேட்ட தலைமையாசிரியா் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம், கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2019 -20 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் 4 போ், தங்களது மாற்றுச் சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறச்சென்றபோது, அவா்களிடம் தலைமையாசியா் ஸ்ரீதரன், ஒவ்வொருவரும் பேப்பா் பண்டல் ரெண்டு வாங்கி வருமாறும், இல்லையென்றால் தலா ரூ.500 தர வேண்டும் என்று கேட்டு மிரட்டுவதும், தரக்குறைவாகப் பேசுவதுமான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. தகவலறிந்த பள்ளிக்கல்வித் துறை நிா்வாகம் அப்பள்ளித் தலைமையாசிரியா் ஸ்ரீதரனை, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தது. மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய ஆசிரியை சுப்புலெட்சுமியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT