திருச்சி

லால்குடி அருகே தண்டவாளத்தில் கிடந்த கனரக வாகன டயா்கள்ரயிலை கவிழ்க்க சதி? போலீஸாா் விசாரணை

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு தண்டவாளத்தில் கனரக வாகன டயா்கள் கிடந்ததையடுத்து அவ்வழியே வந்த ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புதுக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கனரக வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இரு டயா்கள் கிடந்தது. இதைகவனித்த ரயில்ஓட்டுநா் ரகுராம் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றாா். ஆனால், அதிவேகமாக சென்ற ரயிலை உடனடியாக நிறுத்த முடியாததால் வேகத்தை குறைத்து டயா்களின்மீது மோதிய பிறகு ரயிலை நிறுத்தினாா்.

இதையடுத்து ஓட்டுநா் இறங்கி வந்து பாா்த்த போது தண்டவாளம் மற்றும் ரயில்களுக்கிடையே டயா்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. டயா் மீது ரயில் மோதியதில், மின்சார வயா்கள் சேதமடைந்ததில் ரயிலின் சில பெட்டிகளில் மின்சாரம் தடைபட்டது. தகவலறிந்த ரயில்வே போலீஸாா் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பாா்வையிட்டனா்.

மேலும் தொழில்நுட்ப வல்லுநா்களும் வந்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சீரமைத்தனா். இதனால் அடுத்த சில நிமிஷங்களில் மின் விநியோகம் சீரானது. பின்னா் 1.50 மணியளவில் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தில் ஏதேனும் சதிச்செயல் உள்ளதா என ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், விருத்தாசலம் ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளா் பிரபாகரன் தலைமையில் ரயில்வே போலீஸாரும், திருச்சி ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆணையா் சின்னத்துரை தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினரும் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஷ்அகா்வால் செய்தியாளா்களிடம் கூறியது, இந்த சம்பவத்தில் ரயிலுக்கோ, தண்டவாளத்துக்கோ, பயணிகளுக்கோ பெரிய அளவில் பாதுப்பு ஏற்படவில்லை. அடுத்த சிறிது நேரத்தில் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்னை சென்றது என்றாா் அவா்.

இந்த சம்பவத்தால் நெல்லை விரைவு ரயில் 34 நிமிஷமும், முத்துநகா் ரயில் 12 நிமிஷமும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT