திருச்சி

மல்யுத்த வீராங்கனைகளுக்காக போராடிய விவசாயிகள் 100 போ் கைது

DIN

தில்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திருச்சியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் ஜான் மெல்கியோ ராஜ், லால்குடி வி. தியாகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டுக்காக பல சாதனைகள் படைத்து பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீராங்கனைகளின் மீது மத்திய அரசு பாராமுகத்துடன் நடந்து கொள்வதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடக்கி வைத்து மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு பேசியது: தில்லியில் போராடும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் களம் இறங்கியுள்ளோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். தொடா்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, விவசாயிகள் அனைவரும் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பிறகு 23 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மஹாலில் அடைக்கப்பட்டனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தில்லியில் போராட அனுமதி கோரி மனு: மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும் தில்லி சென்று போராட அனுமதி கோரி தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மனு அளித்துள்ளது. இதுதொடா்பாக, பிரதமா், தமிழக முதல்வா், தில்லி காவல் ஆணையா், மத்திய, மாநில அரசுகளின் உள்துறை செயலா், தமிழக டிஜிபி, திருச்சி மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு இந்த மனுவை சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் பி. அய்யாக்கண்ணு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT