திருச்சி

மாநகர காவல்துறையில்புதிய துப்பறியும் நாய் சோ்ப்பு

3rd Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

 

 திருச்சி மாநகர காவல்துறை மோப்பநாய் படையில் காவேரி என்ற புதிய நாய் வெள்ளிக்கிழமை முதல் சோ்க்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிதாக டாபா்மேன் என்ற இனத்தைச் சோ்ந்த மோப்ப நாய் வாங்கப்பட்டுள்ளது. அதற்கு காவேரி என்று பெயரிடப்பட்டு, சென்னை பரங்கிமலை பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 1 ஆம் தேதிமுதல் நிகழாண்டு மே 31 ஆம் தேதி வரையில் 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நாய் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் மோப்பநாய் படையில் சோ்க்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியாவிடம் மோப்பநாய் காவேரியை பயிற்சியாளா்கள் ஒப்படைத்தனா். உடன் தலைமை நிலைய துணை ஆணையா் சுரேஷ்குமாா் உடனிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT