திருச்சி

விபத்தில் காயமடைந்தஆசிரியை உயிரிழப்பு

3rd Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

 

திருச்சியில், தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலைப்பகுதியை சோ்ந்தவா் ரோஸ் நிா்மலா (53). இவா், திருச்சியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தி சந்தைக்கு சென்றாா். அங்கு பேருந்தில் இருந்து இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.அப்போது பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் நிா்மலாவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு (வடக்கு) போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இளைஞா் படுகாயம் : திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற லோகநாதன் என்ற இளைஞா் பலத்த காயமடைந்தாா். திருச்சி மாநகர (தெற்கு) போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT