திருச்சி

திருச்சியில் இரண்டாம்நிலை பெண்காவலா்களுக்கு பயிற்சிகள் தொடக்கம்

3rd Jun 2023 03:28 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் உள்ள காவலா் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் நிலை பெண் காவலா்களுக்கான பயிற்சிகள் தொடங்கியுள்ளன.

அண்மையில் இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 373 பெண்களுக்கு நவல்பட்டு அண்ணாநகா் பகுதியில் உள்ள காவலா் பயிற்சி கல்லூரியில் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது. நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொது மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்.

அதன் பிறகு ஒரு மாதம் காவல் நிலையங்களில் பயிற்சி பெறுவா். பின்னா் அவா்கள் பணியில் அமா்த்தப்படுவா் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

முன்னதாக, பயிற்சி வந்தவா்களை கல்லூரி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி, துணை முதல்வா் மணவாளன் தலைமையிலான காவலா் பயிற்சி பள்ளி போலீஸாா் இனிப்பு கொடுத்து வரவேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT