திருச்சி

பேருந்து மோதியதில் இளைஞா் பலி

2nd Jun 2023 01:56 AM

ADVERTISEMENT

லால்குடி அருகே வாளாடி பகுதியில் வியாழக்கிழமை தனியாா் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

லால்குடி அருகேயுள்ள திருமணமேடு ஊராட்சியில் உள்ள புதுத் தெருவைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜோன் பிரான்சிஸ் (35). தனியாா் நிறுவன ஊழியா்.

வியாழக்கிழமை சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு, திருச்சி- சிதம்பரம் சாலை வழியாக தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

வாளாடியை அடுத்த டி. வளவனூா் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்றபோது, அரியலூரிலிருந்து லால்குடி வழியாக திருச்சி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஜோன் பிரான்சிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த லால்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ஜோன் பிரானசிஸ் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT