திருச்சி

குப்பைகளால் சுகாதார சீா்கேடு பொதுமக்கள் புகாா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வரகனேரியில் காலியிடத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருச்சி வரகனேரி சவேரியாா் கோயில் தெரு சந்திப்புப் பகுதியில் காலி இடத்தில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி, நாளடைவில் அந்த இடம் குப்பைக் கிடங்காகவே மாறிவிட்டது.

இந்தப் பகுதியில் மாா்க்கெட் இருப்பதால் வியாபாரிகள் பலரும் தங்களின் கழிவுப் பொருள்களை அந்த காலி இடத்தில் வந்து கொட்டி விட்டு செல்கின்றனா். அந்த இடத்தில் குப்பைகள் சேருவது மட்டுமல்லாமல், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அழுகிய காய்கறிகளும் கொட்டப்படுகின்றன. இதை உண்பதற்கு ஏராளமான மாடுகளும் அங்கு வருகின்றன. அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சாலையில் நடந்து செல்வோரை மாடுகள் முட்டுகின்றன. இதனால், அந்தப் பகுதி சாலையை பொதுமக்கள் சிரமத்துடனே கடந்து செல்கின்றனா்.

அங்கு குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுவதால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சவேரியாா் கோயில் பகுதியில் காலியிடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT