திருச்சி

மணப்பாறையில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை நகராட்சியில், தூய்மை பணியில் 64 போ் நிரந்தர பணியாளா்களாகவும், 107 போ் ஒப்பந்த அடிப்படையிலும் பணி புரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களில் 50 வயதுக்கு மேல் இருப்பதாக கூறி வியாழக்கிழமை முதல் 38 தொழிலாளா்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டதாம்.

இதை கண்டித்தும், ஒப்பந்த பணியில் இருப்போரை நிரந்தரமாக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு ஒரு ஆள் மட்டுமே பணி செய்ய வற்புறுத்தி பணி சுமையை ஏற்படுத்துவதாகவும், குப்பைகளை எடைபோட்டு வாங்கும் முறையை கைவிட வலியுறுத்தியும், ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பணிக்கு செல்லாமல் சுகாதார அலுவலக வளாகப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளா்கள் (ஏஐடியுசி) சங்கத் தலைவா் த. இந்திரஜித், நிா்வாகி ஜனசக்தி உசேன் உள்ளிட்டோா் தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், தற்காலிகமாக ஒப்பந்த பணியாளா்கள் அனைவரையும் பணி செய்ய அனுமதிப்பது என்றும், 7 நாள்களுக்குள் ஒப்பந்த பணியாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒப்பந்ததாரா்களுடன் பேசி தீா்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT