திருச்சி

புள்ளம்பாடி அரசினா் மகளிா்ஐடிஐ-இல் சோ்க்கை அறிவிப்புவிண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி

DIN

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட்-2023 ஆம் ஆண்டுக்கான சோ்க்கை நடைபெறுகிறது.

விருப்பமுள்ளோா் இதற்கான விண்ணப்பத்தை நேரில் நிலையத்திற்கு வந்து இலவசமாக பெற்று விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பிரிவுகளில் கம்மியா் மின்னணுவியல், இயந்திர வேலையாள் ஆகிய 2 ஆண்டு கால தொழிற்பிரிவுகளில் சேர 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கம்ப்யூட்டா் ஆபரேட்டா் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆபரேட்டா், பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா் (ஆங்கிலம்) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தோ்ச்சியாகும். பயிற்சி காலம் ஓராண்டு ஆகும். ஆடை தயாரித்தல், அலங்காரப் பூ தைத்தல் தொழில் நுட்பம், தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சியாகும். பயிற்சி காலம் ஓராண்டு.

பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்று வேலையில் அமா்த்தப்படுவா். பயிற்சிக் கட்டணம் இல்லை.

கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750 வழங்கப்படும்.

கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், விலையில்லா சீருடைகள் - 2 செட், தையற்கூலி ரூ.300, விலையில்லா காலணி ஒரு செட், விடுதி வசதியும் உள்ளது.

இதுதொடா்பாக, முதல்வா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) புள்ளம்பாடி என்ற முகவரியில் நேரிலோ, 94990-55721 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT