திருச்சி

குறைந்த கட்டணத்தில் வாடகை வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

DIN

வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் வாடகை இயந்திரங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், மால்வாய் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சிறு, குறு விவசாயிகள் சொந்தமாக வாங்க இயலாத நிலையில், நியாயமான வாடகையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு வாடகை மையம் அமைக்க உத்தேச மதிப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாகும். இதில், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை (40 சதம்) மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல, வேளாண் இயந்திரங்களை குறைந்த கட்டணத்தில் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுவதால் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

பின்னா், தெரணி பாளையம் ஊராட்சியில் ரூ.39.95 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி செயலக கட்டடம், ரூ.5 லட்சத்தில் தெரணிபாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சிறுபாலம் அமைக்கும் பணி, கருடமங்கலம் ஊராட்சியில் ரூ.23.43 லட்சத்தில் கருடமங்கலம் முதல் காரை வரை சாலை பலப்படுதும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, சரடமங்கலம் ஊராட்சியில் ரூ.39.95 லட்சத்தில் கட்டப்படும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், எம்.கண்ணணூா் ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் சாா்பில் வழங்கப்பட்டுள்ள சூரிய மின்மோட்டாா் இயக்கத்தின் செயல்பாடுகளையும், கல்லகம் ஊராட்சியில்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு இ-பட்டா வழங்குவது தொடா்பாக கலந்தாாய்வு பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், கீழரசூா் ஊராட்சியில் ரூ.9.50 லட்சத்தில் கட்டடப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், முதுவத்தூா் ஊராட்சியில் ரூ.19.72 லட்சத்தில் கட்டடப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து, கல்லக்குடி ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலப்பள்ளி மாணவா் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, புள்ளம்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் ரசியா கோல்டன் இராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் ரெங்கநாதன், விமல்ராஜ், ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT