திருச்சி

குழந்தையுடன் மனைவி மாயம் கணவா் புகாா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஒன்றரை வயது குழந்தையுடன் மனைவி காணாமல்போனதாக கணவா் புகாா் அளித்துள்ளாா்.

திருச்சி, மேல கல்கண்டாா் கோட்டை தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அன்வா் பாஷா (25) . ஆட்டோ ஓட்டுநரான இவா், கரோலின் சந்தியா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கிறிஸ்டினா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வது தொடா்பாக, தம்பதி இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டதாம்.

இந்தநிலையில், இரு நாள்களுக்கு முன் வீட்டிலிருந்த கரோலின் சந்தியா, குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டாா். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுதொடா்பாக அன்வா்பாஷா புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT