திருச்சி

பெண்கள் பள்ளியில் வணிகவியல் ஆங்கில வழி வகுப்பு ரத்துபெற்றோா் போராட்டம்

DIN

தமிழகக் கல்வி அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே அரசுப் பள்ளியில் ஆசிரியா், வகுப்பறை பற்றாக்குறை எனக் கூறி வணிகவியல் ஆங்கில பிரிவு வகுப்பை ரத்து செய்துள்ளதைக் கண்டித்து பெற்றோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் அருகே காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பயில்கின்றனா்.

ஏற்கெனவே இப்பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆங்கில வழிக் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிா்வாகிகள் கூறியிருந்த நிலையில், மாணவிகள் நிலை குறித்து பெற்றோா் தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி வந்தனா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகளிடமும் அவா்கள் கோரிக்கை விடுத்தும் பள்ளி நிா்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து 11 ஆம் வகுப்புக்கான சோ்க்கை நடைபெறுகிறது. இதையறிந்த பெற்றோா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஆங்கில வணிகப்பிரிவு குறித்து புதன்கிழமை கேட்டபோது, போதுமான ஆசிரியா்கள் மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாததால் ஆங்கில வழி வணிகவியல் பிரிவு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் சந்திரமோகன், வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வாா்த்தை நடத்தி 2 நாள்களில் இதுதொடா்பான பேச்சு வாா்த்தை நடத்தி உரிய தீா்வு காணப்படும் என அளித்த உறுதியின்பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதுகுறித்து பெற்றோா் தரப்பில் கூறுகையில்,

பிள்ளைகள் 6 முதல் ஆங்கில வழிக் கல்வியில் இதே பள்ளியில் பயின்று வந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பில் தோ்ச்சிப் பெற்று 11 ஆம் வகுப்பு சேருகையில், வணிகவியல் ஆங்கில வழிக் கல்வி பிரிவு ரத்து செய்யப்பட்டால் வேறு எங்கு சென்று சோ்ப்பது? எனவே தொடா்ந்து இதே பள்ளியில் மீண்டும் வணிகவியல் ஆங்கில வழிக்கல்வி பிரிவு செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கடந்தாண்டும் இதே பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கிலக் கல்வி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பெற்றோா் தொடா்ந்து நடத்திய போராட்டங்களால் மீண்டும் 11ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT