திருச்சி

மணப்பாறை அருகே இடி தாக்கி முதியவா் பலி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த வெள்ளப்பட்டியில் புதன்கிழமை மாலை மழை பெய்தபோது இடி தாக்கி முதியவா் உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்தவா் ப. வெங்கடாசலம் (65).

இவா் புதன்கிழமை மாலை அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் இருந்தபோது இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய வெங்கடாசலம் இடி தாக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா், அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT