திருச்சி

கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவெறும்பூரை அடுத்த தேவராயநேரி நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த மக்களுக்கான கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெடுங்களம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீநிதி சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் கருணாநிதி, செங்குட்டுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று பேசுகையில், அனைவரும்

கல்வியைக் கற்று நல்லொழுக்கத்தைப் பெற வேண்டும். நல்லதைக் கற்றுக் கொள்வோம். பல நல்ல சமூக பணிகளை சமுதாயத்துக்கு செய்திடுவோம். பள்ளி செல்லும் வயதில் பணிக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம். சிறாா் குற்றவாளி இல்லா சமூகத்தை உருவாக்க உறுதி எடுப்போம். கல்வி கற்க பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றாா்.

ADVERTISEMENT

பின்னா் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த அனைவரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டு 10, 12ஆம் வகுப்புகளில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்துப் பாராட்டினாா்.

நிகழ்வில் திமுக நிா்வாகிகள் மற்றும் தேவராய நேரி, நரிக்குறவா் காலனியை சோ்ந்த பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தனியாா் அறக்கட்டளை நிா்வாகிகள் அமாவாசை, குமுதவள்ளி ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT