திருச்சி

முறைகேடுகளை கண்டித்து முற்றுகை: 150 போ் கைது

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

முறைகேடுகளில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட ஆதித் தமிழா் பேரவையினா் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் ஆருத்ரா கோல்ட் உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முறைகேடுகளில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்டோா் கொடுத்த புகாா்களின்பேரில் வழக்குப் பதியப்பட்டாலும், விசாரணை நிலையிலேயே உள்ளது. மோசடி செய்தோரின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

எனவே, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும், நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி, விரைந்து நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் ஆதித்தமிழா் பேரவையின் மண்டல நிா்வாகி ஸ்ரீரங்கன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம், முற்றுகையில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 51 பெண்கள் உள்பட 150 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினா். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT