தக்காளி விலை வெளிச் சந்தையில் ரூ. 150க்கு விற்கபடுவதால் அரசு தோட்டக்கலை மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலையில் தக்காளி ரூ. 80க்கு விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால், திருவானைக்கா தோட்டக்கலை விற்பனையகத்தில் தக்காளி கிலோ ரூ. 95 க்கு விற்கப்பட்டது.
தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் கூட்டுறவு பண்டக சாலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 80க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
அரசு அறிவித்த முதல் நாளில் மட்டும் கிலோ ரூ. 80க்கு தக்காளி விற்கப்பட்டது. அதனை தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ரூ. 5 அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருவானைக்கா தோட்டக்கலை விற்பனையகத்தில் தக்காளி ரூ. 95க்கு விற்பனை செய்தனா்.இது குறித்து அவா்களிடம் கேட்டபோது, இந்த விலைக்கு தான் விற்க சொல்லி உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தனா்.