திருச்சி

பெண்கள் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

12th Jul 2023 05:42 AM

ADVERTISEMENT

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் ஜெகதீசன் உத்தரவின்பேரில், முசிறி தீயணைப்பு நிலைய அலுவலா் கா்ணன் தலைமையிலான நிலைய பணியாளா்கள் பங்கேற்று, வீடு மற்றும் பொது இடங்களில் தீப்பற்றினால் அதை அணைக்கும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறி, செய்தும் காட்டினா்.

இந்த நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT