திருச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாம்

DIN

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

முகாமை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் திங்கள்கிழமை தொடக்கி வைத்து பேசியது, தமிழகத்தில் மாணவ, மாணவியரின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில், நான் முதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் மாணவ, மாணவியரை வெற்றியாளராக்கும் வகையில், இத் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன் தமிழில் தனித் திறன் பெறவும், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு நோ்முகத் தோ்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியை சிறந்த முறையில் மாணவா்களுக்கு வழங்கும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் இருந்து 8 மாவட்டங்களில் 450 பேராசிரியா்கள் இத்திட்டத்தில் பயிற்சிபெற வந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது படத்துக்கு ஆட்சியா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.செல்வம், பதிவாளா் எல்.கணேசன், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிங்கி ஜனாா்த்தனன், பாரதிதாசன் பல்கலைக்கழக நான் முதல்வன் திட்ட இயக்குநா் பிரேம்குமாா், மண்டல கல்வி இணை இயக்குநா்கள் குணசேகரன், எழிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT