திருச்சி

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சாா்பில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சா்வதேச தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். துணை இயக்குநா்கள் (குடும்ப நலம்) ஸ்ரீபிரியா தேன்மொழி, சாவித்திரி (காசநோய்), ஏ.சாந்தி (தொழுநோய் மருத்துவப் பணிகள்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் செவிலிய மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனா். பேரணி, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, அங்குள்ள கூட்ட அரங்கில் தொழுநோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதன்மையா் டி.நேரு, மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிகரிக்கும் தொழுநோயாளிகள்: இது குறித்து தொழுநோய் ஒழிப்புத் திட்ட மாவட்ட துணை இயக்குநா் ஏ.சாந்தி கூறுகையில், கடந்தாண்டு 58 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்ட நிலையில், நிகழாண்டில் இதுவரை 62 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா். வீடு வீடாக மிகத் தீவிரமாக ஆய்வு நடத்தி, தொழுநோயாளிகளை கண்டறிந்து, தொழுநோயை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசின் 2025க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரிகள், கிராமப்புறங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT