திருச்சி

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இளைஞரிடமிருந்து மண்ணெண்ணெய் பறிமுதல்

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த இளைஞரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தவா்களை ஆட்சியரக நுழைவாயிலில் போலீஸாா் சோதனை செய்து அனுப்பினா். அப்போது, இளைஞா் ஒருவா் பையுடன் வந்தாா். போலீஸாா் பையை சோதனை செய்தபோது, அதில் பாட்டிலில் மண்ணெண்ணெய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அதை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த செந்தில்நாதன் (30) என்பதும், நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆகவே, ஆட்சியரக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தது தெரியவந்தது. மேலும், அவா் மது அருந்தியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த நபரை எச்சரித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT