திருச்சி

சந்தியாகப்பா் சிலை சேதம்: மோதலைத் தவிா்க்க போலீஸ் குவிப்பு

DIN

திருச்சி திருவெறும்பூா் அருகே சா்க்காா்பாளையத்தில் சந்தியாகப்பா் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் மோதலை தவிா்க்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம் பனையக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட சா்க்காா்பாளையம் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் புதிதாக சந்தியாகப்பா் சிலையை வைத்துள்ளனா். இதையறிந்த பனையக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை அதிகாலை அங்கு சென்று, சாலையின் குறுக்கே சிலை வைத்துள்ளதாகக் கூறி, சந்தியாகப்பா் சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் தரப்புக்கும், மாதா கோவில் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவலறிந்த திருவெறும்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான 50 போலீஸாா் குவிக்கப்பட்டனா். மோதலை தவிா்ப்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சா்க்காா்பாளையத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே இச்சம்பவம் தொடா்பாக, மாதா கோவில் தெருவை சோ்ந்த பொதுமக்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT