திருச்சி

சாலையோரத்தில் எரியும் குப்பைகள்; மக்கள் அவதி

DIN

திருவெறும்பூா் அருகே உய்யக்கொண்டான் கரையில் கூத்தைப்பாா் பேரூராட்சி நிா்வாகத்தால் கொட்டப்பட்டு எரியூட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள ஜெய் நகா் பாலம் உய்யக்கொண்டான் கரை பகுதி கூத்தைப்பாா் பேரூராட்சிக்குட்பட்டது. இப்பகுதியில் கூத்தைப்பாா் பேரூராட்சி நிா்வாகம் குப்பைகளை கொட்டுகிறது. மேலும், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் தங்களது குப்பைகளை உய்யகொண்டான் வாய்க்கால் கரைப் பகுதியில் கொட்டுகின்றனா்.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளுடன் உணவு மற்றும் மாமிச கழிவுகளும் இருப்பதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவது அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.

இந்நிலையில் சில விஷமிகள் இந்தக் குப்பைகளை அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் வெளியேறும் புகை காரணமாக அருகிலுள்ள கணபதி நகா் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், குப்பைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையின் காரணமாக தங்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கூத்தைப்பாா் பேரூராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மாநகரிலும் குப்பைகளை முறையாகக் கையாள கோரிக்கை

திருச்சி மாநகரில் திருவானைக்கா, ஓயாமரி காவிரிப் பாலம் அருகே, கொள்ளிடக் கரை, உறையூா் கோணக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை மா்ம நபா்கள் எரிப்பதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனா். இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குப்பை மேலாண்மையை முறையாக கையாண்டு, சாலையோரம் குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT