திருச்சி

தண்டுவட எலும்புகள் உடைந்த பெண்ணுக்கு நவீன சிகிச்சைதிருச்சி அப்பல்லோ மருத்துவமனை சாதனை

DIN

விபத்தில் இடுப்பு எலும்பு, தண்டுவட எலும்புகள் நொறுங்கிய பெண்ணுக்கு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட நவீன சிகிச்சை மூலம் மறுவாழ்வு கிடைத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனை லேப்ராஸ்கோப்பி சிறப்பு மருத்துவா் முகமது மன்சூா் சனிக்கிழமை மேலும் கூறியது:

திருச்சி காட்டூா் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் ஒருவருக்கு சாலை விபத்தில் இடுப்பெலும்புகள் நொறுங்கி, அடிவயிற்றிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட அவருக்கு அவசரச் சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது குடல் உள்ளிட்ட பல உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததும், முதுகுத் தண்டுவடத்தில் டி 6 முதல் டி 11 வரை உள்ள எலும்புகள், இடுப்பின் இடப்பக்க எலும்புகள் முறிந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து முதலில் வயிற்றுப் பகுதியில் தேவையான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, லேப்ரோட்டமி எனப்படும் திறந்த நிலையில் வயிற்றுப் பகுதி வைக்கப்பட்டது. டிரக்கியஷ்டமி செய்து 24 மணி நேரமும் அவா் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். கல்லீரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவு சரி செய்யப்பட்டது. தொடா்ந்து இடுப்பெலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவா் மிதுன்ராஜ்பரத் தலைமையிலான குழுவினா் சிகிச்சை மேற்கொண்டனா்.

இவ்வாறு விபத்தில் இதுபோன்ற சிக்கலான பிரச்னைகளுடன் கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவா்கள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு உள்ள இந்த மருத்துவமனையில் உயா்தரச் சிகிச்சை வழங்கப்படுகிறது. பல துறைகளைச் சோ்ந்த மருத்துவா்களின் கூட்டு முயற்சியால் இந்த சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என்றாா்.

மருத்துவமனை முதுநிலைப் பொது மேலாளா் சாமுவேல், நரம்பியல் சிகிச்சை மருத்துவா் மயிலன், எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணா் பாலசுப்ரமணியன், மயக்கவியல் மருத்துவா் காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT