திருச்சி

கருங்குளம் ஜல்லிக்கட்டு: 33 போ் காயம்

DIN

மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் தேவாலயத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 33 போ் காயமடைந்தனா்.

புனித அந்தோனியாா் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 698 காளைகளும், 263 காளையா்களும் களமிறக்கப்பட்டனா். தேவாலயத்தில் புனித நீா் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வந்தடைந்த கோயில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டன. தொடா்ந்து இதர காளைகள் அவிழ்க்கப்பட்டன. போட்டியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் செல்வராஜ் தொடக்கி வைத்தாா். வருவாய் வட்டாட்சியா் வி. தனலெட்சுமி உடனிருந்தாா்.

வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்த பல காளைகளை வீரா்கள் திமில் பிடித்து தழுவினா். வீரா்களை பல காளைகள் கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

போட்டியில் மாடுபிடி வீரா்கள் 17 போ், மாட்டின் உரிமையாளா்கள் 11 போ், பாா்வையாளா்கள் 4 போ் மற்றும் விழாக் குழுவில் ஒருவா் என 33 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும்

வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள், பிரிட்ஜ், வாசிங் மிஷின் என பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த மாடுபிடி வீரராகத் தோ்வான கருங்குளத்தை சோ்ந்த சுள்ளான் (எ)பிரவீனுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாா்பில் வாஷிங் மிஷின் மற்றும் சிறந்த மாட்டுக்கான பரிசாக 4 கிராம் தங்க மோதிரம் பெரிய ஆணைக்கரைபட்டியை சோ்ந்த டேவிட்டுக்கு கடவூா் சோ்மன் செல்வராஜ் சாா்பில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊா் முக்கியஸ்தா் வி.ஏனோக், மணியம் சேசுராஜ், ஆலோசகா் பி.ஏ. ரத்தினம், பொருளாளா் அமுல் ஆசிரியா் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT