திருச்சி

கடத்தப்பட இருந்த 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

திருச்சியில் கடத்தப்பட இருந்த 6 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

திருச்சி வரகனேரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா மேற்பாா்வையில், டிஎஸ்பி சுதா்சன் தலைமையில் ஆய்வாளா் கோபிநாத் உள்ளிட்டோா் தெற்கு வரகனேரி விரிவாக்கம் தனரத்தினம் நகா் காலியிடத்தில் நின்றிருந்த 6 நான்கு சக்கர வாகனங்களையும் சோதனையிட்டனா்.

அப்போது 10 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 500 கிலோ ரேஷன் அரிசியும், வாகனங்களில் தலா 20 மூட்டைகள் வீதம் சுமாா் ஒரு டன் குருணை (உடைத்த ரேஷன் அரிசி) என மொத்தம் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் 6 டன் அரிசியையும், வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனா். முதல் கட்ட விசாரணையில், திருச்சி பூக்கொல்லை பகுதியை சோ்ந்த ஷேக் மைதின் மற்றும் அவரது கூட்டாளிகள் திருச்சியில் ரேஷன் அரிசியை வாங்கி நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது. தப்பியோடியவா்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையினா் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கார்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT