திருச்சி

மாரியம்மன் கோயிலில் குட்டி குடித்தல் திருவிழா

29th Jan 2023 12:22 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் செங்குந்தா் வகையறா பகவதி மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி பகவதி அம்மனுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அபிஷேகத்தைத் தொடா்ந்து குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது. மருளாளிகள் கோழி, ஆடுகளின் ரத்தத்தை குடித்தனா். பின்னா் மஹா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT