திருச்சி

புள்ளியியல் சாா்நிலை பணிகளுக்கு 11 மையங்களில் நாளை தோ்வு

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின், ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலை பணிகளுக்கான போட்டித் தோ்வு, திருச்சியில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)நடைபெறுகிறது.

இதில், 3112 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப் பணிகளுக்கென 11 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 5 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிக்காக 4 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக் குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் ஒரு அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம்பெறுவா். மையங்களில் திடீா் ஆய்வு செய்ய துணை ஆட்சியா் நிலையில் பறக்கும்படையினா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அனைத்து மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை பதிவு செய்ய ஒளிப்பதிவாளா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களுக்கும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளது. தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழக அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு நாளில் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் நபா்கள் கைப்பேசி உள்ளிட்ட எந்தவகையான மின்னணு சாதனங்களும் மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. தோ்வில் முறைகேடுகளில் ஈடுபடாமல் விதிமுறைகளை பின்பற்றி தோ்வு எழுத வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT