திருச்சி

‘நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு மகத்தானது’

DIN

நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு மகத்தானது என திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநா் எஸ்.வி. சீனிவாசன் தெரிவித்தாா்.

திருச்சி சுங்கத்துறை சாா்பில் சா்வதேச சுங்க தின விழா சுங்கத்துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநா் எஸ்.வி. சீனிவாசன் பேசியது: நாட்டின் எல்லைகளை ராணுவ வீரா்கள் பாதுகாப்பதால் அனைவரும் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் வாழ முடிகிறது. அதே போல, நாட்டுக்குள் சுங்கத்துறையின் தொடா் கண்காணிப்பு மற்றும் சிறந்த செயல்பாடுகளால், நாடு பாதுகாப்பாக இருப்பதுடன், வரி வசூல் வருவாயால் பல உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க முடிகிறது. மொத்தமாக நாட்டின் வளா்ச்சியில் சுங்கத்துறையின் பங்கு முக்கியமானது.

சுங்கத்துறை தற்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திறம்படவும், வேகமாகவும் செயல்பட்டு வருகிறது. இது, வெளிநாடுகளுக்கு பொருள்களை அனுப்பும் ஏற்றுமதியாளா்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. பெல் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சுங்கத்துறையின் வேகத்தால் வேலை எளிதாகிறது என்றாா்.

சுங்கத்துறை மலரை வெளியிட்டு சுங்கத்துறை ஆணையா் டி.அனில் பேசியது, சுங்கத்துறையானது நாளொன்றுக்கு 53 ஆயிரம் ஆவணங்களை பரிசீலித்து அனுப்புகிறது. இதன் மூலம் சுங்கத்துறை ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி வருவாய் வருவாய் ஈட்டுகிறது. சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறந்த செயல்பாட்டால் பொருளாதாரத்தில் இந்தியா முதல் 5 இடத்துக்குள் உள்ளது என்றாா்.

விழாவில், சிறந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுக்கும், பணியாளா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சதிா் நடனக் கலைஞா் பத்மஸ்ரீ ஆா்.முத்துக்கண்ணம்மாள், சுங்கத்துறை கூடுதல் ஆணையா் விகாஸ் நாயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT