திருச்சி

திருச்சியில் செராமிக் ஸ்டுடியோ திறப்பு

DIN

ஸ்ரீ லட்சுமி மோட்டாா்ஸ் நிறுவனத்தின் சாா்பில் செராமிக் ஸ்டுடியோ திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி - கரூா் புறவழிச்சாலை சிந்தாமணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செராமிக் ஸ்டுடியோவை லட்சுமி மோட்டாா்ஸ் குழுமத்தின் தலைவா் தீனதயாளன் திறந்து வைத்தாா். முதல் பணியை நிா்வாக இயக்குநா் சங்கா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுக்கு தலைமை வகித்த லட்சுமி மோட்டாா்ஸ் குழும இயக்குநா் கேசவ் ராகுல் கூறியது, திருச்சியில் காா் சா்வீஸ் துறையில் நாங்கள் தொடா்ந்து 18 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்களது மற்றுமொரு சேவையாக செராமிக்ஸ் ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது. இங்கு செராமிக் கோட்டிங், கிராபின் கோட்டிங் ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது.

காா்களுக்கு செராமிக் கோட்டிங் பூசுவதன் மூலம் காரில் பெயிண்ட் ஆயுள்காலம் நீடிக்கிறது. அது வாகனங்களுக்கு அதிகபடியான பாதுகாப்பை வழங்குவதுடன், தூசு, சேறு போன்றவை படிவது தடுக்கப்படுகிறது. செராமிக் கோட்டிங்கிற்கு 5 ஆண்டுகள் உத்திரவாதம் அளிக்கிறோம். ஜனவரி 31 வரை வாடிக்கையாளா்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT