திருச்சி

தாட்கோ மூலம்அழகு கலை பயிற்சி

28th Jan 2023 11:08 PM

ADVERTISEMENT

தாட்கோ மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு அழகு கலை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் சுய தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற வகையில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

இப் பயிற்சியில், ஆதிதிராவிடா்-பழங்குடியினத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாள் ஆகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். தகுதியானோா் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT