திருச்சி

திருச்சி சிறப்பு முகாமில் போலீஸாா் சோதனை

28th Jan 2023 11:09 PM

ADVERTISEMENT

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 6 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, வங்கதேசம், இந்தோனேஷியா, நைஜீரியா, ஈரான், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த குற்ற வழக்கில் தொடா்புடையவா்களும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் என 120 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த முகாமில் சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி, 5 பேரை கைது செய்தும், அவா்களிடமிருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகளை பறிமுதல் செய்தும் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை திருச்சி மாநகர காவல் துணை ஆணையா்கள் அன்பு, சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சிறப்பு முகாமில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களிடமிருந்து 6 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT