திருச்சி

திருச்சியில் நாளை மறுநாள் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்

28th Jan 2023 12:59 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் ஜன.30ஆம் தேதி அரசு தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனையில் நடைபெறுகிறது.

இதில், நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்பாளா்களுக்கு ரூ.200 வீதம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

ஓரிரு நிமிஷங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்லலாம். பின்விளைவுகள் ஏதும் இருக்காது. விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட குடும்ப நல அலுவலகத்தை 0431- 2460695 என்ற தொலைப்பேசி எண்ணிலும், மாவட்ட விரிவாக்க கல்வியாளரை 94432 46269 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஊரக நலப்பணிகள் துணை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT