திருச்சி

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு ரூ. 323 கோடி வருமானம்

DIN

திருச்சி ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ. 323.27 கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்றாா் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணிஷ் அகா்வால்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவா் மேலும் பேசியது:

திருச்சி கோட்டம் நடப்பு நிதியாண்டில் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 2.18 லட்சம் பயணிகள் மூலம் ரூ. 323.27 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டைவிட வருமானத்தில் 89.4 சதவீதமும், பயணிகள் எண்ணிக்கையில் 179.5 சதவீதமும் அதிகமாகும். கடந்தாண்டைவிட 66 சதவீதம் அதிகமாக 9.711 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.

பயணச்சீட்டு பரிசோதனை வழியே அபராதமாக ரூ.7.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளில் விளம்பர ஒப்பந்தம் மூலம் ரூ. 3.14 கோடியும், 9 ரயில் நிலையங்களில் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் ரூ.1.77 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. ராணுவத் தளவாடங்கள், உப்பு, முட்டை உள்ளிட்ட பொருள்களைக் கையாண்ட வகையில் ரூ. 2.53 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

95 சதவீதம் நேரந்தவறாமல் ரயில்கள் வந்துள்ளன. 21 நிலையங்களில் தானியங்கி தீ கண்டறிதல் அலாரம் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் 757 தற்காலிக பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்றாா் அவா்.

பொன்மலை பணிமனையில்...: திருச்சி பொன்மலை மத்திய பணிமனையில் தேசியக் கொடியேற்றிய பணிமனை தலைமை மேலாளா் ஷியாமாதாா் ராம் 41 தொழிலாளா்களுக்கு சிறப்பு விருதுகள், 35 கண்காணிப்பாளா்கள், 4 அலுவலா்களுக்கு தலைமைத்துவ விருதுகள், 20 தொழிலாளா்கள் அடங்கிய 4 குழுக்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினாா்.

பொன்மலை ரயில்வே உயா்நிலைப்பள்ளி மாணவா்கள், பணிமனைப் பயிற்சி மைய பயிற்சியாளா்கள், சாரணா் இயக்கத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பணிமனை வளாகத்தில் 1,050 பீமா வகை மூங்கில் (முள்ளில்லா) மரக் கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT