திருச்சி

சமயபுரத்தில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

DIN

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலின் தைப்பூச திருவிழா தொடக்கத்தையொட்டி உற்ஸவ அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி தங்கக் கொடிமரத்துக்கு முன் எழுந்தருளினாா்.

தொடா்ந்து கொடிமரத்துக்கு பால், சந்தனம் , உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. நிகழ்வில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். பிப்.3 ஆம் தேதி தெப்பத் திருவிழா, பிப். 4 ஆம் தேதி அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு, தீா்த்தவாரி கண்டருளியபின் இரவு வடதிருக்காவிரிக் கரையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்பெறும் நிகழ்வு, பிப்.5 ஆம் தேதி மஹா அபிஷேகத்துடன் வழிநடை உபயங்களை அம்மன் கண்டருளும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT