திருச்சி

கடந்தாண்டில் 4,947 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன திருச்சி விமான நிலைய இயக்குநா்

DIN

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் கடந்தாண்டு மொத்தம் 4,947 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என்றாா் அதன் இயக்குநா் பி. சுப்பிரமணி.

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றிய அவா் மேலும் பேசியது:

திருச்சி சா்வதேச விமான நிலையம் கடந்த டிசம்பா் வரை சுமாா் 10,000 விமானச் சேவைகள் மூலம் 3.04 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் உள்பட மொத்தம் 12. 28 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. திருச்சியில் தற்போது நடைபெறும் புதிய விமான நிலைய முனையப் பணிகள் விரைவில் முடிந்து அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்.

ஒரே நேரத்தில் 2900 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையத்தில் உள் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான ஓடுதளத்தை இணைக்கும் வகையிலான டாக்ஸிவே பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புடன் கூடிய விரைவான விமானச் சேவைகளை உடனுக்குடன் வழங்க முடியும்.

திருச்சி விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் (காா்கோ) கடந்தாண்டில் டிசம்பா் வரை 4,947 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்வில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை துணை ஆணையா் எச்.எஸ். நயால், சுங்கத் துறை, தீயணைப்புத் துறை, குடியேற்றப் பிரிவு, விமான நிறுவனங்கள், நிா்வாகப்பிரிவு உள்ளிட்ட தொடா்புடைய துறையினா் பலரும் பங்கேற்றனா். சிறந்த பணிகளை பாராட்டி சான்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT