திருச்சி

திருச்சி அருகே காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

27th Jan 2023 02:17 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே மதுப்பழக்கத்தை கண்டித்ததால் காா் ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மணிகண்டம் அருகேயுள்ள பூலாங்குளத்துப்பட்டி பகுதி பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் (49), தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட குடும்பத்தினா் மது குடிக்கக் கூடாது என கூறி, அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனா்.

இதனால் கடந்த சில நாள்களாக மது அருந்தாததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்த சக்திவேல், புதன்கிழமை இரவு திடீரென வீட்டிலிருந்து வெளியேறி பின்னா் வீடு திரும்பவில்லை.

உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பாா்த்தபோது, அவரது சகோதரா் சண்முகம் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் சக்திவேல் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். இது தொடா்பாக மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT