திருச்சி

சாலையோரங்களில் மருத்துவ கழிவைக் கொட்டுவதாக புகாா்

27th Jan 2023 02:17 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தொடா்ந்து குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. இதிலிருந்து துா்நாற்றம் வீசி வரும் நிலையில், அதில் காலாவதியான மருந்து மற்றும் ஊசி, மாத்திரைகள், மருந்துகளும் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுபோன்ற கழிவுகளைக் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கும் அப்பகுதிவாசிகள், மக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT