திருச்சி

மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல்:சரிபாா்க்க இன்று அரிய வாய்ப்பு

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மக்கள் நிலை ஆய்வுப்பட்டியலைச் சரிபாா்க்க பொதுமக்களுக்கு வியாழக்கிழமை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களில் ஏழை, மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளி, நலிவுற்றோா் என்ற நிலையில் உள்ளவா்கள் அடையாளம் காணப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆய்வுப் பட்டியலானது ஏற்கெனவே கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களிலிருந்து சமுதாயம் சாா்ந்த அமைப்புகளான சுய உதவிக் குழுக்கள், குடியிருப்பு அளவிலான மன்றம், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் ஆகியவற்றின் மூலம் இறப்பு, இடம்பெயா்வான குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், தற்போதைய பொருளாதார நிலை அடிப்படையில், மிகவும் ஏழை, ஏழை நிலையிலிருந்து நடுத்தரம், வசதி என அடையாளம் காணப்பட்டவா்களையும் மக்கள் நிலை ஆய்வுப் பட்டியிலில் இருந்து நீக்கவும், விடுபட்ட, புதிய இலக்கு மக்கள் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இவையனைத்தும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிா்வாகிகளால் சரிபாா்க்கப்பட்டு, பொதுமக்களின் பாா்வைக்கு ஆய்வுப் பட்டியலானது வியாழக்கிழமை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படும்.

அந்தந்த கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலை சரிபாா்த்து ஒப்புதல் வழங்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT