திருச்சியில் வேலை கிடைக்காத விரத்தியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் பாலாஜி மகன் விக்னேஷ் (26 ). பட்டதாரியான இவா் வேலை கிடைக்காத விரக்தியில் செவ்வாய்க்கிழமை வீடடில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கே.கே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்