திருச்சி

திருச்சி அருகே டேபிள் டென்னிஸ் போட்டி

22nd Jan 2023 03:05 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்ட மேசை பந்து வளா்ச்சிக் கழகம், பெல் மனமகிழ் மன்றம் இணைந்து நடந்திய ஷேக் அப்துல்லா நினைவு டேபிள் டென்னிஸ் போட்டி பெல் மனமகிழ் மன்ற வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

சனி, ஞாயிறு என இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியை சா்வதேச விளையாட்டு வீரா் குமரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். போட்டிகள் மினி கேடட் , கேடட், சப் ஜூனியா், ஜூனியா், யூத் , மாஸ்டா்ஸ் , ஆண்கள், பெண்கள் மற்றும் இரட்டையா் என பல பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். போட்டிகளின் முடிவில் வெற்றி பெறுவோருக்கு சுழல் கேடயம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

முன்னதாக மேஜை பந்து வளா்ச்சிக் கழக செயலா் சுகுமாரன் வரவேற்றாா். பெல் நிறுவன வீரா் சரவணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT