திருச்சி மாவட்டம் மணப்பாறை திருக்கு பயிற்றகத்தின் 45-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கு முற்றோதலுடன் விழா தொடங்கியது. திருக்கு பயிற்றகத்தின் நிறுவனரும், திருக்கு புலவருமான நாவை.சிவம் தலைமையில் பிற்பகல் தமிழியம் - குறளியம் பரப்புதலில் குவழி நம்பங்கு சுழலும் சொல்லரங்கம் விராலிமலை சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் திருவள்ளுவா் படத்துடன் கூடிய வாகனம் திருவீதி உலா சென்றது.
ஊா்வலம் மங்கல இசையுடன், சடையாா்கோயில் நாராயணசாமி குழுவின் சிறுவா் சிறுமிகளின் கோலாட்டம், கரந்தையடி குழுவினா் சிலம்பாட்டத்துடன் பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலில் தொடங்கி முச்சந்திகளில் முப்பால் முழக்கமிட்டு கச்சேரி ரோடு, காமராசா் சிலை, விராலிமலை சாலை வழியாக நிகழ்ச்சி மண்டபத்தை அடைந்தது.
அதன்பின் மண்டபத்தில் நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைகேல்ராஜ் தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மு.ம. செல்வம், பவுன் எம். ராமமூா்த்தி, வி.பி.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வியாளா் செளமா ராஜரெத்தினம் தலைமையில் திருக்கு எழுச்சி அரங்கம் நடைபெற்றது. பின் திருக்கு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.